உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10 பேரை கடித்து குதறிய நாய் அடித்துக்கொலை

10 பேரை கடித்து குதறிய நாய் அடித்துக்கொலை

சேலம், 55: லம், அம்மாபேட்டை, ராஜகணபதி தெரு, சாமியார் மட பகுதியில் நேற்று காலை, 8:00 மணிக்கு ஒரு தெருநாய், அந்த வழியே சென்ற மக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில், தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவர் பிரதீப், 18, ஸ்ரீயாதனா, 11, காவ்யா, 10, கோவிந்தராஜ், 76, பழனிசாமி, 44, உள்பட, 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட லட்சுமி, 65, உள்புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வேறு வழியின்றி, மக்கள் சேர்ந்து அந்த நாயை அடித்துக்கொன்று விட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை