மேலும் செய்திகள்
முருங்கைக்காய் கிலோ 100 ரூபாயாக உயர்வு
02-Oct-2025
தலைவாசல், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நாட்டு ரகம், செடி முருங்கை, ஒட்டு ரகம் உள்ளிட்ட முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் முருங்கைக்காய் கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம், 100, நேற்று, 110 முதல், 120 ரூபாயாக உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில், 130 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேபோல் கிலோ, 30க்கு விற்ற கத்தரிக்காய், 40 ரூபாய்; 60க்கு விற்ற நாட்டு அவரை, 130 ரூபாயாக உயர்ந்தது. மேலும் புரட்டாசி, 3வது சனியால், பல்வேறு காய்கறி தேவை அதிகம் இருந்த நிலையில், வரத்து குறைவாக இருந்ததால், கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
02-Oct-2025