உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை தடுப்பில் கார் மோதி முதியவர் பலி

சாலை தடுப்பில் கார் மோதி முதியவர் பலி

தலைவாசல்,நாமக்கல், மலையாண்டி தெருவை சேர்ந்தவர் பிரபாகர், 61. இவரது மனைவி இந்திரா, 55. சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரபாகரை அழைத்துக்கொண்டு, நேற்று அதிகாலை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இந்திரா புறப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த, டிரைவர் முருகன், 45, 'பஞ்ச்' காரை ஓட்டினார். அதிகாலை, 3:30 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்றபோது, சாலையோர தடுப்பில், கார் மோதியது. இதில் பிரபாகர், இந்திரா, முருகன் படுகாயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரபாகர் உயிரிழந்தார்.இந்திரா மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.நிதி நிறுவன ஊழியர்கடலுார் மாவட்டம் திட்டக்குடி அருகே கிளமங்கலத்தை சேர்ந்த, ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார், 27. ஆத்துாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கலெக்ஷன் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ஆத்துாரில் இருந்து நடுவலுார் வழியே, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்புறம் சென்ற 'காஸ்' டேங்கர் லாரி மீது பைக் மோதியது. இதில் ரஞ்சித்குமார் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், லாரியை விட்டு தப்பிய டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை