உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி

பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி

ஆத்துார், டிச. 26-கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடி, கிருஷ்ணகுப்பத்தை சேர்ந்த, வேளாங்கண்ணி மகன் ஆல்வின் லியோ, 23. டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'யமஹா' பைக்கில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே, ஆத்துார் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார். ஆத்துார், சந்தனகிரி பிரிவு சாலையில் சென்றபோது, டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஆல்வின்லியோ உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை