உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோழீஸ்வரர் கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

சோழீஸ்வரர் கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார், பாகல்பட்டியில், இந்து சமய அறநி-லையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதிசிவன் சோழீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கும்பாபிேஷகம் நடந்தது. அங்கு மண்-டல பூஜை நேற்று நடந்தது.அங்கு மாலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், வெங்கடாஜலம், ஓமலுார் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ