உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த விவசாயி, டிராக்டர் மீட்பு

கிணற்றில் விழுந்த விவசாயி, டிராக்டர் மீட்பு

ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்தவர் ரமேஷ், 50. இவரது விவசாய நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன், 43, குத்தகைக்கு எடுத்துள்ளார். அங்கு நிலத்தை உழுவதற்கு, நேற்று காலை, 9:30 மணிக்கு, 'மகேந்திரா' மினி டிராக்டரை ஓட்டிச்சென்று கிணறு அருகே நிறுத்தினார். அதன் பின் பகுதியில் ஏர் கலப்பையை மாட்-டிக்கொண்டிருந்தார். 10:30 மணிக்கு மினி டிராக்டர், பின்னோக்கி சென்றதால், டிராக்டருடன் முருகேசனும் சென்றார். ஆனால் டிராக்டர், 80 அடி ஆழம், 40 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்தது. பின் தொடர்ந்து சென்ற முருகேசனும் விழுந்தார்.தகவல் கிடைத்து உடனே வந்த, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், முருகேசனை மீட்டனர். தொடர்ந்து, 'கிரேன்' உதவியுடன், ஒரு மணி நேரத்துக்கு பின், டிராக்டரையும் மீட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரணையில் டிராக்டரை ஆப் செய்-யாததோடு, ரிவர்ஸ் கியரில் இருந்தது தெரியாமல் கலப்பையை மாட்டியபோது விபத்து ஏற்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்