| ADDED : ஜூன் 25, 2024 02:32 AM
சேலம்: சேலம் அஸ்தம்பட்டி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பாக, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி, நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். பட்டுக்கூடு கிலோ ஒன்றுக்கு, 700 ரூபாய் விலை நிர்ணயித்தல், தரமான முட்டைகளை இளம்புழு மையங்களுக்கு வினியோகம் செய்தல், தமிழகத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு விற்பனை சந்தை அமைத்தல், பட்டுக்கூடு விற்பனை முடிந்த அதே நாளில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டுதல், பட்டு வளர்ச்சித்துறை ஊழல் மீது உறுதியான நடவடிக்கை தேவை என்பன உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். தொடர்ந்து, இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பட்டுக்கூடு விவசாயிகள் கலந்து கொண்டனர்.