உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்வாயில் பாசன நீர் திறப்பால் முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

கால்வாயில் பாசன நீர் திறப்பால் முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

சேலம்: ''மேட்டூர் கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறப்பால் விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்,'' என, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேட்டி அளித்தார்.இதுகுறித்து, சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, சேலம் எம்.பி., செல்வகணபதியிடமும், என்னிடமும், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் பரிசீலித்து, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல்வரின் நடவடிக்கைக்கு மேட்டூர் கிழக்கு கரை நீர்பாசன விவசாய சங்கங்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை