மேலும் செய்திகள்
பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு
05-Oct-2025
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
05-Oct-2025
400 மீ., ஓட்டத்தில் மாணவர் முதலிடம்
05-Oct-2025
முதல்வர் கோப்பையில் மாநில செஸ் தொடக்கம்
05-Oct-2025
சேலம் : சேலம், தீவட்டிப்பட்டி தும்பிப்பாடி காட்டு வளவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 32. இவர், தன் மனைவி மைதிலி, 23, மகள் மவுசிலா, 2, ஆகியோருடன் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்-ணெண்ணையை, பாலகிருஷ்ணன் தன்மீது ஊற்-றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து மீட்டு, முதலுதவி அளித்தனர்.விசாரணையில் அவர் கூறியதாவது: என்னுடைய கிராமத்தில் குடும்பத்துக்கு பாத்தி-யப்பட்டு, 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், எனக்-கான பாகப்பிரிவினை கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனது தந்தை ஏழு-மலை, குடும்பத்தாருக்கு தெரியாமல், சிலரின் துாண்டுதல் பேரில் நிலத்தை விற்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நிலத்தை சுவா-தீனம் எடுக்க வந்த ரவிச்சந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதால், தற்கொலைக்கு முயன்று, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு கூறினார்.இதையடுத்து, பாலகிருஷ்ணனிடம் சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025