| ADDED : டிச 05, 2025 10:42 AM
வாழப்பாடி: வாழப்பாடி, திருமனுாரை சேர்ந்தவர் பன்னீர்-செல்வம், 44. அவரது சொந்த கட்டடத்தின் மேல் தளத்தில் வசித்துக்கொண்டு, தரைத்தளத்தில் மளிகை கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் தீபத்திருநாளை ஒட்டி, மாலையில், கடையின் உட்புறம், வெளிப்பகுதியில் விளக்கு வைத்தார்.இந்நிலையில் இரவு, 7:35 மணிக்கு, கடையின் பூஜை அறைக்குள் தீப்பற்றி எரிந்தது. மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 20 நிமிடத்தில் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதில், மளிகை கடையில் இருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமா-கின. பூஜை அறையில் வைத்த விளக்கால் விபத்து ஏற்பட்டதாக, முதல்கட்ட விசார-ணையில் தெரியவந்ததாக, வாழப்பாடி போலீசார் தெரிவித்தனர்.