உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை ஆத்துாரில் ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கு இலவச ஆலோசனை

நாளை ஆத்துாரில் ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கு இலவச ஆலோசனை

ஆத்துார்: உடல் பருமன் நோய் என்பது உலகம் முழுதும் பெரும்பான்மை-யாக உள்ளது. இது சர்க்கரை நோய், மூட்டு வலி, குறட்டை, குழந்தையின்மை, குடல் இறக்கம்(ஹெர்னியா) போன்ற நோய்க-ளுக்கு வழிகாட்டியாக உள்ளது.இதற்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த முறையாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை, தமிழக அரசின் முதல்வர் காப்-பீடு திட்டத்தில், உயிர் காக்கும் அறுவை சிகிச்சை என அங்கீ-காரம் கொடுக்கப்பட்டுள்ளது.அதனால், கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஸ்ரீவிஷ்ணுபிரியா திருமண மண்டபத்தில், நாளை காலை, 9:00 முதல், 1:00 மணி வரை, உடல்பருமன், கட்டுப்படாத சர்க்கரை நோய், மூட்டு-வலி, இதய நோய், குறட்டை, குழந்தையின்மை, தைராய்டு போன்ற நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்க உள்ளது.அதில் கோவை ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன், சர்க்-கரை நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரவீன்ராஜ், உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் சரவணக்குமார். மருத்-துவர் பிரதீப் ஹோசுவா ஆகியோர், ஆலோசனை வழங்க உள்ளனர்.அதில் அதிக உடல் எடையால் குறட்டை, குழந்தையின்மை, கட்-டுப்பாடற்ற சர்க்கரைநோய், ஹெர்னியா மூட்டுவலி போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கிய வாழ்க்கையை பெற்றிடுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ