உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம்:சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சுகமதி தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குதல்; ஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் பதவி உயர்வு, பணி நியமனங்களை நடைமுறைப்படுத்தல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில துணை தலைவர்கள் கணேசன், முருகேசன், மாவட்ட தலைவர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ