உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்

சேலம்: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதல்நாளான நேற்று, கலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இதில் ஆறு பேருக்கு மாறுதல் வழங்கப்பட்டது.இன்று கலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், நாளை பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்துக்குள் மாறுதல், ஜூலை 11 முதல், 20 வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடைபெற உள்ளது. ஜூலை 31 வரை கவுன்சிலிங் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ