உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது

அரசு பள்ளி மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது

ஓமலுார், நமரக்கன்று வளர்த்தல், நெகிழி பை தவிர்த்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பணிகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கு, பசுமை பாதுகாவலர் விருது, தர்மபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, அந்த விருதை, ஓமலுார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழா நிறைவாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்