மேலும் செய்திகள்
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பூஜை
02-Jan-2025
வீரபாண்டி: திருவிளக்கு பூஜை குழுவினரால், வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி நாட்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்-பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்குழுவினர் மார்கழி முழுதும் தினமும் காலை, 5:30 மணிக்கு அரியானுார் மகா கணபதி கோவி-லுக்கு வந்து திருவெம்பாவை பாடி பள்ளியெழுச்சியுடன் வழி-பாட்டை தொடங்குகின்றனர்.தொடர்ந்து அருகே உள்ள மகா சக்தி மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து, வீரபாண்டி லட்சுமி நாராயணர் கோவிலில் திருப்பாவை, திருப்பள்ளியெச்சி, வாரணம் ஆயிரம் பாசுரங்களை பாராயணம் செய்கின்றனர்.பின் வீரபாண்டி காமாட்சியம்மன் கோவிலில் சகலகலா வல்லி மாலை, சரஸ்வதி அந்தாதியை பாடி விட்டு நிறைவாக அங்கா-ளம்மன் கோவிலில் அபிராமி அந்தாதி, விநாயகர் அகவல், கந்த-சஷ்டி கவசம் ஆகியவற்றை பாராயணம் செய்து பூஜையை முடிக்-கின்றனர்.
02-Jan-2025