உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேம்படுத்தப்பட்ட விவசாய முறை: விவசாயிகளுக்கு மாணவியர் விளக்கம்

மேம்படுத்தப்பட்ட விவசாய முறை: விவசாயிகளுக்கு மாணவியர் விளக்கம்

இடைப்பாடி : ஈரோடு மாவட்டம் கோபி அருகே துாக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜே.கே.கே., முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரியில், 4ம் ஆண்டு படிக்கும் மாணவியர் சர்வதா, ஷர்மிளா, சினேகா, சோமேஷ்வரி, ஸ்ரீமாயாலட்சுமி, ஸ்ரீதர்ஷினி, சுபத்ரா, சுகிந்திரா, சுஜிதா. இவர்கள், ஊரக வேளாண் பயிற்சி திட்டத்தில், சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் தங்கி, விவசாய களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பூலாம்பட்டியை சேர்ந்த விவசாயிகளுக்கு, மேம்படுத்தப்பட்ட விவசாய முறைகள் குறித்தும், வீரியம் உள்ள நெல் விதைகள், வீரியம் அற்ற நெல் விதைகளை தேர்ந்தெடுக்க முட்டை மிதப்பு தொழில்நுட்பம் மூலம் செயல்முறை விளக்கமும் அளித்தனர். மேலும் தரிசு நிலங்களில் மர விதைகளை, குறைந்த பராமரிப்பில் முளைக்க செய்வது; பூச்சி, பறவைகள் மூலம் ஏற்படும் சேதத்தை தவிர்ப்பது; ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வது; விதை பந்தின் முக்கிய அம்சங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை