சேலம்: பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்-டிய ஊக்கத்தொகை நிலுவை, 215 கோடி ரூபாயை, தமிழக அரசு உடனே வழங்க வலியு-றுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலர் ராஜேந்திரன் அறிக்கை: ஆவினுக்கு வழங்கும் பால் உற்பத்தியாளர்-களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு, 2023 நவ., 18 முதல், லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆனால், கடந்த ஜூலை முதல் இதுவரை, 215 கோடி ரூபாயை, ஆவின் நிறுவனத்துக்கு வழங்காமல், அரசு நிலுவை வைத்துள்ளது.அரசிடம் இருந்து ஊக்கத்தொகை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், ஆவின் நிறுவனம் வங்கி கடன் பெற்று, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது. தற்போது ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையால், அக்-டோபர் முதல், மாவட்ட ஒன்றியங்களுக்கு நிதி விடுவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் ஊக்கத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதே நிலை நீடித்தால், ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு வழங்க முற்படுவர். இதனால் முதல்வர், 4.65 லட்சம் பால் உற்பத்தி-யாளர்கள் நலன் கருதி, டிசம்பர் வரையான நிலு-வைத்தொகை, 215 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும்.