உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அத்தி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை தொடக்கம்

அத்தி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை தொடக்கம்

சேலம்: சேலம், பட்டைக்கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில், அத்தி மரத்தால் செய்யப்பட்ட, கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் சிலை உள்ளது.அங்கு, பொதுத்தேர்வு உள்ளிட்ட இறுதி தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, லட்சார்ச்சனை விழா நேற்று காலை கணபதி யாகத்துடன் தொடங்கியது. காலை, 9:00 முதல், 12:00 மணி, மாலை, 5:30 முதல், 8:30 மணி வரை, பட்டாச்சாரியார்களால் ஹயக்ரீவ மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது. இதேபோல் இன்றும் நடக்கிறது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு, லட்சார்ச்சனை நிறைவாக பூஜையில் வைத்து பூஜித்த பேனா, பென்சில் பிரசாதமாக வழங்கப்படும்.தன்னம்பிக்கை நிகழ்ச்சிசேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், 2024 கல்வியாண்டில், 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல நிர்வாக இயக்குனர் பொன்முடி தலைமை வகித்தார்.அதில் விநாயகா மிஷன் பல்கலை இயக்குனர் செந்தில்குமார், முனைவர் கஸ்துாரி, மத்திய ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பொது தேர்வை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து வழிகாட்டினர். தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில் உள்ளிட்டவை அடங்கிய பை, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.போக்குவரத்து அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !