| ADDED : ஜூலை 08, 2024 07:39 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி கிராம உதவியாளர் ஆண்டி. சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவரின் மகன் பிரகாசம், 40, கூலி தொழிலாளியான இவர், கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த, 5ம் தேதி பிரகாசத்துக்கு ஆதரவாக, வி.சி., கட்சி சேலம் வடக்கு மாவட்ட துணை செயலர் ஆறுமுகம், காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் சென்று அலுவலர்களிடம் விசாரித்தார். கருணை அடிப்படையில் வேலை கேட்ட விண்ணப்பத்தை ஏன் தாமதம் செய்கிறீர்கள் எனக்கேட்டு, வாக்குவாதம் செய்து, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது பரவி வருகிறது.