உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?

ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?

ஜருகுமலையில் மொபைல்போன் சிக்னல் கிடைக்குமா?பனமரத்துப்பட்டி, அக். 12-பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மலை கிராமத்தில், சரிவர சிக்னல் கிடைக்காததால், மொபைல் போன் பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஜருகுமலை மக்கள் கூறியதாவது:மேலுார் கிராமத்தில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மொபைல் போன் கோபுரம் இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை