உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் மே 5ல் தொடக்கம்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் மே 5ல் தொடக்கம்

சேலம்: இந்திய அரசின், மத்திய பனைப்பொருட்கள் நிறுவனம் சார்பில், சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் மே, 5 முதல், மே, 15 வரை நடக்க உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் முறை, உரைகல்லில் தங்கம் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, 'ஹால்மார்க்' தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில், 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும். பயிற்சி இறுதியில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.இதன்மூலம் தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். பயிற்சியில் சேர விரும்புவோர், 3 புகைப்படம், முகவரி, கல்வி சான்றிதழ்களுடன், பயிற்சி கட்டணம், 5,300 ரூபாயை, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 6,254 ரூபாயாக செலுத்த வேண்டும். விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை