உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொங்குநாடு மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

கொங்குநாடு மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

நாமக்கல் : தமிழகத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவர்கள் சோபிகா, நித்திஸ், 500க்கு, 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர். மாணவி பிரியங்கா, 495 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி நிகாஷினி, 493 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.மேலும், தேர்வெழுதிய, 120 மாணவர்களில், 54 பேர், 450க்கு மேல் மதிப்பெண்ணும், 96 பேர், 400க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடவாரியாக தமிழில், 98, ஆங்கிலத்தில், 99, கணிதத்தில், 100, அறிவியலில், 100, சமூக அறிவியலில், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில், 17 பேர், அறிவியல், 2 பேர், சமூக அறிவியல், 23 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, இயக்குனர் ராஜராஜன், முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை