உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில உரிமையாளர்கள் முற்றுகை சமன்படுத்தும் பணி நிறுத்தம்

நில உரிமையாளர்கள் முற்றுகை சமன்படுத்தும் பணி நிறுத்தம்

இடைப்பாடி: இடைப்பாடி நகர் பகுதியில், வீட்டுமனை இல்லாத மக்கள் பயன்படுத்த, 1988ல், மேட்டுத்தெரு, தாவாந்தெரு, ஆலச்சம்பா-ளையம் காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை, தமிழக வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தி-யது. பெரும்பாலான நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்-கப்பட்டு, நிலமும் வீட்டு வசதி வாரியத்தால் விற்கப்பட்டது.இந்நிலையில் மேட்டுத்தெருவை ஒட்டிய, 11 குடும்பத்தினர், உரிய இழப்பீடு கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வீட்டு வசதி வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து வழக்கு முடிந்துள்ள, 8 ஏக்கர், 19 சென்ட் நிலத்தை சமன்படுத்தும் முயற்சியில் நேற்று, செயற்பொறியாளர் கவிதா-வாணி, உதவி செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி உள்ளிட்ட வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளர்களான, 11 குடும்-பத்தினர், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.அப்போது, 'தற்போதைய மார்க்கெட் மதிப்பின் படி இழப்பீடு வழங்க வேண்டும். இல்லை எனில், எங்கள் நிலத்தை திருப்பி வழங்க வேண்டும்' எனக்கூறினர். இதனால் நிலத்தை முழுதும் சமன்படுத்த முடியாமல், பணியை பாதியில் நிறுத்தி விட்டு, அதி-காரிகள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை