உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இயற்கை இடுபொருள்தயாரிக்க நேரடி பயிற்சி

இயற்கை இடுபொருள்தயாரிக்க நேரடி பயிற்சி

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, அம்மாபாளையம் பெரிய காட்டூரில், 'அட்மா' திட்டத்தில், 40 விவசாயிகளுக்கு, இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து நேரடி செயல்விளக்க பயிற்சி நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி வட்டார அட்மா குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், இயற்கை முறையில் பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல், ஊட்டமேற்றிய சாணம் உள்ளிட்ட தயாரிப்பு முறைகள் பற்றி நேரடி செயல் விளக்க பயிற்சி அளித்தார்.வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, இயற்கை வேளாண் இடுபொருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா, நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை