உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்கம்பி உரசி லாரி டிரைவர் பலி

மின்கம்பி உரசி லாரி டிரைவர் பலி

இடைப்பாடி: இடைப்பாடி அருகே தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெட்ட, நேற்று லாரியை அழைத்து வந்தார். குமாரபாளையம், ஓடப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த, டிரைவர் ராமர், 52, ஓட்டி வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு கதிர்வேல் தோட்டத்தில் நிறுத்தி விட்டு, லாரி மீது ஏறியுள்ளார். அப்போது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் துாக்கி வீசப்பட்ட ராமர், சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ