மேலும் செய்திகள்
ரூ.1,000 வழங்கக்கோரிதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
11-Jan-2025
சேலம்: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மா.கம்யூ., சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாநகர் செயலர் பச்சமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் முத்துகண்ணன் பேசுகையில், 'தமிழகத்துக்கு எந்த வளர்ச்சி திட்டமும், பட்ஜெட்டில் இல்லை. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார். தொடர்ந்து பட்ஜெட், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மாநகர் குழு உறுப்பினர்கள் சுல்தான், திவ்யா, பெரியசாமி, தமிழ், அன்னதானப்பட்டி கிளை செயலர் பிரபா உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூர் ஸ்டேட் வங்கி முன், மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலர் வசந்தி தலைமையில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேச்சேரியில், ஒன்றிய செயலர் மணிமுத்து தலைமையிலும், ஏற்காட்டில், தாலுகா கமிட்டி உறுப்பினர் பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
11-Jan-2025