உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓசியில் மதுபானம் கேட்டுநண்பரை தாக்கியவருக்கு வலை

ஓசியில் மதுபானம் கேட்டுநண்பரை தாக்கியவருக்கு வலை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அடுத்த கட்ட புளிரமரத்தை சேர்ந்த, கொத்தனார் சுந்தரேசன், 45. முத்தானுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 45. பெயின்ட் அடிக்கும் வேலை செய்கிறார். நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு தும்பல்பட்டி டாஸ்மாக் கடை அருகே மது அருந்தினர். 'போதை'யில் இருந்த ஈஸ்வரன், மது வாங்கி தரும்படி சுந்தரேசனிடன் கேட்டார். அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன், தகாத வார்த்தைகளில் திட்டி, சுந்தரேசனை தாக்கினார். அவர் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை தேடுகின்றனர்.-----------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்