மேலும் செய்திகள்
பைக்கில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி பலி
21-May-2025
கெங்கவல்லி :தலைவாசல் அருகே, பெரிய புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் வேல்முருகன், 45. இவர், தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில், டீக்கடை நடத்தி வந்தார். நேற்று, கூடமலையில் உள்ள சித்தப்பா குப்புசாமியிடம், 5 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, 'ேஹாண்டா - சைன்' பைக்கில், ஆணையாம்பட்டியில் இருந்து, நடுவலுார் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, நடுவலுார் சாலை வளைவில், பைக்கில் இருந்து தவறி விழுந்த அவர், படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்த இடத்தில் கிடந்த, ஐந்து லட்சம் ரூபாயை, அப்பகுதியினர் மீட்டு கெங்கவல்லி போலீசாரிடம் கொடுத்தனர். அந்த பணத்தை, வேல்முருகன் மகன் வெற்றிவேலிடம் போலீசார் ஒப்படைத்தனர்.கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21-May-2025