கதவை திறக்கும் முன் பஸ்சில் ஏற முயன்றவர் பலி
காரிப்பட்டி: அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த, கொத்தனார் இளையரசன், 30. நேற்று இரவு, 7:00 மணிக்கு, பெரியகவுண்டாபுரம் கசாப்பு காடு ஸ்டாப்பில், சேலம் நோக்கி சென்ற, அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது தடுமாறி விழுந்த அவர், படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார், இளையரசன் உடலை கைப்பற்றி, மேட்டூரை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வத்திடம் விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இளையரசன், 'போதை'யில் இருந்துள்ளார். பஸ் வந்து நின்று, கதவை திறக்கும் முன் ஏற முயன்றார். அப்போது தடுமாறி விழுந்து இறந்துள்ளார்' என்றனர்.