உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டூவீலர்கள் மோதி மெக்கானிக் பலி

டூவீலர்கள் மோதி மெக்கானிக் பலி

ஓமலுார், இடைப்பாடி பக்கநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோகுல், 25. ஜலகண்டாபுரம் சந்தைப்பேட்டை அருகே மெக்கானிக் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பழுது பார்க்க விடப்பட்ட ஹீரோ கிளாமரூர் பைக் எடுத்துக்கொண்டு தலைக்கவசம் அணியாமல், வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். ஜலகண்டாபுரம்-பக்கநாடு ரோடு சவுரியூர் அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த ஹீரோ பைக் நேருக்கு நேர் மோதியது. இதில், கோகுல் பலத்த காயம் அடைந்து, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்ட சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ