உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு; ஆயில் மோட்டார்களை அகற்ற முடிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு; ஆயில் மோட்டார்களை அகற்ற முடிவு

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருவதால், நீர்-பரப்பு பகுதியில் சாகுபடிக்காக கிணறுகளில் வைத்துள்ள ஆயில் மோட்டார்களை அகற்ற, நீர்-வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்-கொண்டுள்ளனர்.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 227 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 1,038 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்-தினம், 39.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 39.74 அடியாகவும், 11.96 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 11.95 டி.எம்.சி.,யாகவும் சற்று குறைந்தது.மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், ஏராளமான கிணறுகள் உள்ளன. அந்த கிணற்று நீரை ஆயில் மோட்டார் மூலம் உறிஞ்சி, விவசா-யிகள் சுற்றுப்பகுதியில் எள், பருத்தி, சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்-கின்றனர். அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்ததால் நிலத்-தடி நீரை பாதுகாக்கும் வகையில், நீர்பரப்பு பகு-தியில் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சு பயிர் சாகுபடி செய்ய, நீர்வளத்துறை அதிகா-ரிகள் தடை விதித்துள்ளனர்.கடந்த இரு வாரங்களாக, நீர்பரப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் கிணற்று நீரை ஆயில் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுக்க வேண்டாம் என, அதிகாரிகள் வலியுறுத்-தியுள்ளனர்.அதற்கேற்ப பெரும்பாலான விவசாயிகள், ஆயில் மோட்டார்களை அங்கிருந்து எடுத்து சென்றுள்-ளனர். சில இடங்களில் உள்ள மோட்டார்களை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !