உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்மன் கோவில்களில் பால் குடம் ஊர்வலம்

அம்மன் கோவில்களில் பால் குடம் ஊர்வலம்

ஆத்துார்: ஆத்துார் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், பால் குடம் ஊர்வலம் நடந்தது. ஆத்துார், ராணிப்பேட்டை பகுதியில் மேல்மருவத்துார் ஆதிபரா-சக்தி அம்மன் வழிபாட்டு மன்ற கோவில் உள்ளது. இங்கு நேற்று, ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜை-யொட்டி, பால் குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள், கடைவீதி முதல், ராணிப்பேட்டை, விநா-யகர் கோவில் தெரு, நுாலகம் வழியாக மேல்மருவத்துார் ஆதி-பராசக்தி அம்மன் வழிபாட்டு மன்ற கோவிலுக்கு சென்று, பால் அபி ேஷகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்-தனர்.அதேபோல், ஆத்துார், கோட்டை பகுதியில் உள்ள கோட்டைக்-கரை காளியம்மன், பெரியநாயகி அம்மன் கோவில்களில், 25வது ஆண்டு பால் குடம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலமாக எடுத்து வந்த பாலை, அம்மன் மீது ஊற்றி வழிபாடு செய்தனர். பின், புஷ்ப அலங்காரத்தில் காளியம்மன் அருள்பாலித்தார்.திரைப்பட நடிகைகள் அஷ்மிதா, பசி சத்யா, சாந்தி, ஹமீதா, மணிமேகலை, திரைப்பட தயாரிப்பாளர் மீனாட்சி உள்-ளிட்டோர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை