உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செத்து மிதந்த மீன்கள் ; ஆலை கழிவுநீர் கலப்பு?

செத்து மிதந்த மீன்கள் ; ஆலை கழிவுநீர் கலப்பு?

ஆத்துார்: ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை வழியே செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே தடுப்பணை உள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் தடுப்பணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் நேற்று தடுப்பணையின் இருபுறமும் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, 'கரையோர பகுதியில் உள்ள சேகோ உள்ளிட்ட ஆலைகளில் இருந்து, சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீர் விடுவதால் மீன்கள் இறந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாசன விவசாயிகள், கலெக்டர் பிருந்தாதேவிக்கு மனு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை