உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.எல்.ஏ., கார் டிரைவரின் மகன் கிணற்றில் சடலமாக மீட்பு

எம்.எல்.ஏ., கார் டிரைவரின் மகன் கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம், அமரகுந்தியை சேர்ந்தவர் செல்வம். இவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணியின் கார் டிரைவராக உள்ளார். இவரது மகன் வெங்கடேசன், 33. இவர், சேலம் அருகே உள்ள, தனியார் போக்-குவரத்து நிறுவனத்தில், 7 ஆண்டாக கணக்காளராக பணிபுரிந்தார். அந்நிறுவன உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு, கன்னங்குறிச்சியில் நிலம் உள்ளது. அங்கு நடந்து வரும் கட்டட பணிகளை, இரு மாதங்களாக வெங்கடேசன், மேற்பார்வை செய்து வந்தார். கடந்த, 22ல் அங்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை செல்வம், கன்-னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்த நிலையில், நேற்றிரவு கன்னங்குறிச்சியில் பழனிசாமி, ராஜேந்-திரன் என்பவர்களுக்கு சொந்தமான கிணற்றில் வெங்கடேசன் இறந்து கிடந்த தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர், சட-லத்தை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ