மேலும் செய்திகள்
வளர்ச்சி பணிகள் துவக்கம்
21-Nov-2024
ஓமலுார்: பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள். இவரது தொகுதி மேம்பாட்டு நிதியில், ஓமலுார் அருகே பாகல்பட்டி ஊராட்சி, ஓம்சக்தி நகரில், 15 லட்சம் ரூபாயில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கரிசல்பட்டி மயானத்தில் 7 லட்சம் ரூபாயில் எரிமேடை அமைக்க பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அதில் எம்.எல்.ஏ., அருள், பணிகளை தொடங்கி வைத்தார்.மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பாகல்பட்டி புதுமாரியம்மன் கோவில் தெரு, பூமிநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நல்லாகவுண்டம்பட்டி, சின்னபாகல்பட்டி ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை, கான்கிரீட், பேவர் பிளாக் சாலைகள் என, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். ஊராட்சி தலைவர் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Nov-2024