மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம், காராமணிதிட்டையை சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன், 75, கிருஷ்ணன், 70. இவர்களின், 6.5 ஏக்கர் நிலத்தை, பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் குணசேகரன், அமலாக்கத்துறை உதவியுடன் அபகரிக்க முயற்சிப்பதாக, மா.கம்யூ., குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு குணசேகரன், 'குத்தகை நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் கடன் தொகையை திரும்ப கேட்டோம். அதனால் பொய் புகார் கூறுகின்றனர்' என, விளக்கம் அளித்துள்ளார். எனினும் இரு விவசாயிக்கு ஆதரவாக, மா.கம்யூ., சார்பில் நேற்று, சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கட்சியினர் பலரும், பா.ஜ., நிர்வாகிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.பேராசிரியர் உள்பட 5 பேருக்கு 'சம்மன்'சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல்(பொ), கணினி அறிவியல் துறை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர், 'பூட்டர் பவுண்டேஷன்' பெயரில் தனியார் நிறுவனத்தை தொடங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு பெரியார் பல்கலை உளவியல் துறை முனைவர் ஜெயக்குமார், 49, பொருளியல் துறைத்தலைவர் ஜெயராமன், மேலாண் கல்வி துறை பேராசிரியர் சுப்ரமணியபாரதி, விலங்கியல் துறை முனைவர் நரேஷ்குமார், 39, தொகுப்பூதிய பணியாளர் தண்டீஸ்வரன், 43, ஆகியோர், ஜன., 4ல்(இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் நேற்று, 'சம்மன்' அனுப்பியுள்ளார்.டவுன் பஸ் சிறைபிடிப்புகொளத்துாரில் இருந்து வெள்ளக்கரட்டூருக்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலையில் இயக்காததால், கொளத்துார் பள்ளிகளுக்கு கிராமப்புற மாணவர்கள், மற்றவர்களின் இருசக்கர வாகனங்களில், 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர். வழக்கமாக, கொளத்துாரில் இருந்து மாலை, 4:30க்கு உக்கம்பருத்திகாடு வழியே வெள்ளக்கரட்டூருக்கு பஸ் இயக்கப்படுகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், கிராமங்களுக்கு செல்வர். நேற்று மாலை, கால் மணி நேரம் முன்னதாக, 4:15க்கு பஸ் வெள்ளக்கரட்டூர் புறப்பட்டு சென்று விட்டது. இதனால் கொளத்துாரில் பள்ளி முடிந்து வந்த மாணவ, மாணவியர், பஸ் இல்லாமல் தவித்தனர்.இதையறிந்த அப்பகுதி மக்கள், நேற்று மாலை, 5:15 மணிக்கு உக்கம்பருத்திகாடு வந்த பஸ்சை சிறைபிடித்தனர். கொளத்துார் போலீசார், வி.ஏ.ஓ., லோகநாத் பேச்சு நடத்தினர். எனினும் காலை, மாலையில் பள்ளி நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும் என, மக்கள் கூறியதால் சிறைபிடிப்பு போராட்டம், இரவு, 8:00 மணி வரை நீடித்தது.மனம், உடல், ஆரோக்கிய தின விழிப்புணர்வுசர்வதேச மனம், உடல், ஆரோக்கிய தினத்தையொட்டி நேற்று, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்கலை வேந்தர் கணேசனின் வழிகாட்டுதல்படி நடந்தது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.சேலம் ஸர்த்திகா ஒருங்கிணைந்த மருத்துவ மைய நிறுவனர், யோகா பயிற்சியாளர் பார்த்திபன், உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் அவசியம், அதில் யோகாவின் பங்களிப்பு சார்ந்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். துறை மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை, துறையின் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஜெயபாலன், மைபிரபு செய்திருந்தனர்.கரும்புக்கு கூடுதல் விலைவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்பொங்கல் பரிசில் முழு கரும்பு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பூலாம்பட்டியில் உள்ள விவசாயிகள், அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினர். அப்போது ரேஷன் கடைகளில் ஒரு கரும்புக்கு பதில், 2 கரும்பு வழங்க வேண்டும்; கடந்த ஆண்டைப்போல் அரசே கொள்முதல் செய்வதோடு, கடந்த ஆண்டை விட கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.