உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

மளிகை கடையில்திருடிய இருவர் கைதுநல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 47, சவுளுரான்கொட்டாய் பகுதியில் மளிகை கடை, டீக்கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் கடந்த, 5 அன்று கடையை பூட்டிவிட்டு சென்றார். அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் ஒருபுறம் துாக்கியவாறு இருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த, 10 ஆயிரத்து, 500 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து, நல்லம்பள்ளி காந்தி நகரை சேர்ந்த இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்குறித்து விழிப்புணர்வுஅரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரூர், அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் ஓட்டுப் போடும் முறை குறித்து விளக்கினார். மேலும், மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் மாதிரி ஓட்டு போட்டனர். மாணவர் சக்திவேல் ஓட்டு போடுவதன் அவசியம், ஓட்டு இயந்திரம் குறித்து பேசினார். அரூர் தாசில்தார் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நல்லம்பள்ளியில் மூதாட்டி மாயம்நல்லம்பள்ளி அருகே, பாளையம்புதுார் அடுத்த கோம்பையை சேர்ந்தவர் முருகன், 50: இவர் பாளையம்புதுாரில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவருடைய தாயார் சின்ன கொளந்தை, 85, முருகனின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 5 அன்று வீட்டில் துாங்க வைத்துச் சென்ற பின், காலையில் பார்த்தபோது சின்ன கொளந்தையை காணவில்லை. இது குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனைபொம்மிடி அடுத்த வட சந்தையூரில் நடந்த ஆட்டு சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகள் வாங்க உள்ளுர், வெளியூர், வியாபாரிகள், பொதுமக்கள் என வழக்கத்தை விட அதிகமானவர்கள் வந்திருந்தனர். வளர்ப்பு ஆட்டு குட்டிகள், 3,000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. ஆடு, ஆட்டு கிடா, 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று நடந்த சந்தையில், ஒரு கோடியே, 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பில்பருத்தி பள்ளியில்அறிவியல் கண்காட்சிபொம்மிடி அடுத்த பில்பருத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, உணவு திருவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் பெருமாள் சரவணன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள், அறிவியல் கண்காட்சியில் தாங்கள் செய்திருந்த அறிவியல் உபகரணங்களை காட்சிப்படுத்தி விளக்கினர். இயற்கை முறையில் பழவகைகள், சிறுதானிய உணவுகளை சமைத்து பார்வைக்கு வைத்திருந்தனர். மாணவி பிருந்தா முதல் பரிசு, கிஷோர், 2ம் பரிசு, நவீத், 3ம் பரிசு பெற்றனர். ஆசிரியர்கள் ஹரிவரசன் இராசன், சந்திரகுமார், ஆசைத்தம்பி, ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.உளி கற்கள் கடத்தியவாகனம் பறிமுதல்இண்டூர் அருகே அனுமதியின்றி, சட்டவிரோதமாக உளிகல் கடத்திய வாகனத்தை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புவியியல் மற்றும் சுரங்கத்துறை, விழுப்புரம் மண்டல பறக்கும் படையின், உதவி இயக்குனர் ராமஜெயம் மற்றும் தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் தனி வருவாய் ஆய்வாளர் அருணகிரி ஆகியோர் கடந்த, 10 அன்று இண்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, விநாயகா ப்ளூ மெட்டல்ஸ் குவாரிக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் அனுமதியின்றி, உளி கற்களை ஈச்சர் வாகனத்தில் கடத்தியதை கண்டுபிடித்தனர். வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கருங்கற்கள் கடத்திய நான்கு பேர் கைதுபொம்மிடி அடுத்த பத்திரெட்டிஹள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கருங்கற்களை சிலர் லாரியில் ஏற்றி கடத்துவதாக பொம்மிடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது கிரேன் மூலம் லாரியில், கருங்கற்களை சிலர் ஏற்றி கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் சுரக்காப்பட்டியை சேர்ந்த தங்கவேல், 60, தனது நிலத்திற்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் உள்ள கருங்கற்களை விற்பனை செய்ய எடுத்தது தெரிய வந்தது.இதையடுத்து தங்கவேல், அரூர் பழைய பேட்டையை சேர்ந்த கிரேன் டிரைவர் பாஸ்கர், 53, காரிமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் மாலிக் பாஷா, 24. கல் ஏற்ற வந்த கூலி தொழிலாளி கெளாபாறையை சேர்ந்த அர்ஜுனன், 42, ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். லாரி, கிரேன், கருங்கற்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பிளஸ் 2 மாணவி மாயம்போலீசார் விசாரணைஈரோடு, கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சேலத்தில் மினி லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இதில் இவரது, 17 வயது மகள் கருங்கல்பாளையத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபர் காதலிப்பதாக தெரிந்து அவர்களை பெற்றோர் கண்டித்து, அவர்களின் உறவினர் வீடான தர்மபுரி மாவட்டம், ராமநாதபுரம் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.கடந்த, 9ல் இரவு உறவினர் பாரதி வீட்டின் முன் உட்கார்ந்து இருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது தாய், தனது மகளை பிரகாஷ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என பொம்மிடி போலீசில் புகார் செய்தார்.சிறுவன் மீது புகார்* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைகோட்டையை சேர்ந்த, 17 வயது மாணவி தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாணவி மாயமானார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் மாணவியை கடத்திச் சென்றிருக்கலாம் என, அவரது தாய் அளித்த புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.பூர்விகா அப்ளையன்சஸ் 14 வது கிளை திறப்புபூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின், 14 வது கிளை தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று திறக்கப்பட்டது.பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். தொழிலதிபர் டி.என்.சி., இளங்கோவன், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி மாது குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். சின்னத்திரை நடிகை சைத்திரா ரெட்டி, எம்.ஐ., நிறுவனத்தின் ரெட்மீ நோட், 13 பிரோ 5ஜி புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தினார்.அப்போது தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசுகையில்,''கடந்த, 19 ஆண்டுகளாக, 475க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தரத்துடன் விற்பனை செய்ய பூர்விகா அப்ளையன்சஸ் தர்மபுரியில் தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார்.தவணை முறையில் பொருட்களை வாங்குபவருக்கு, 1 மாத இ.எம்.ஐ., இலவசம். 10,000 ரூபாய் எக்சேஞ்ச் போனஸ், வாங்கும் பொருட்களின் மதிப்பு அடிப்படையில், 26 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.5,000 மதிப்புள்ள கோல்டன் வவுச்சர் வழங்கப்படுகிறது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட, 6 வீட்டுக்கு உபயோக பொருட்கள் அடங்கிய ரூ.73,454 மதிப்புள்ள கல்யாண காம்போ ரூ.38,490-க்கும், 10 வீட்டுக்கு உபயோக பொருட்கள் அடங்கிய ரூ.87,549 மதிப்புள்ள கல்யாண காம்போ ரூ.49,999 -க்கும் வழங்கப்படுகிறது.வேன் கண்ணாடியைஉடைத்த இருவர் கைதுஓசூர், நல்லுார் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்ப ரெட்டி, 49. இவர் கடந்த, 9ல், ஆம்னி வேனில் ஓசூரிலிருந்து பாகலூர் சாலையில் சென்றுள்ளார். அவ்வழியாக மற்றொரு காரில், ஓசூர் கே.சி.சி. நகர் சந்திரகுமார், 42, பாகலுார் சாலை ஜான் தேவாரம், 38, ஆகியோர் வந்துள்ளனர். நல்லுார் சோதனை சாவடி அருகில் வந்தபோது ஆம்னி வேனும், காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஏற்பட்ட தகராறில் சந்திரகுமார், ஜான் தேவாரம் ஆகியோர் சின்னப்ப ரெட்டி வேன் கண்ணாடியை உடைத்தனர். சின்னப்பரெட்டி புகார்படி, ஓசூர் ஹட்கோ போலீசார் சந்திரகுமார், ஜான்தேவாரம் இருவரையும் கைது செய்தனர்.அனுமந்த் ஜெயந்தி விழாகோவில்களில் வழிபாடுகிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந்த் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளி கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். மாலையில் தங்கத் தேர் பிரகார உற்சவம் நடந்தது.பெங்களூரு சாலை அரசு பஸ் டிப்போ அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில், அபி ேஷகம் செய்யப்பட்டு பஞ்சமுக அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். இதே போல், முருகன் கோவில் மலை மீதுள்ள ஆஞ்சநேயர், பெத்தனப்பள்ளி பக்த ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.குழந்தையுடன் தாய் மாயம்போலீசில் கணவர் புகார்கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 30. இவர், திருவண்ணாமலையில் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பிரியாமணி, 25, தனது மூன்று வயது குழந்தையுடன் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் தனது வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 8ல் குழந்தையுடன் வீட்டை விட்டு சென்ற பிரியாமணியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நாகரசம்பட்டி போலீசில் சுப்பிரமணி அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் இருந்து நகை திருட்டுஅரூர் அடுத்த பச்சினாம்பட்டியை சேர்ந்தவர் அம்சவேணி, 65; தனியாக வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் வசிக்கும் தன் மகள் உமா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த தோடு, ஜிமிக்கி உள்ளிட்ட, 2 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருட்டு போனது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆம்னி பஸ்கண்ணாடி உடைப்பு; இருவருக்கு வலைசேலம் மாவட்டம், சஞ்சீவியூரை சேர்ந்தவர் வெங்கடாசலம், 30, தனியார் ஆம்னி பஸ் டிரைவர். இவர் கடந்த, 8 இரவு பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி ஆம்னி பஸ்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், ஆம்னி பஸ் வந்த போது அந்த வழியாக வந்த கார், பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அதற்கு வழி விடாததால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர், மற்றும் ஒருவரும், ஆம்னி பஸ்சை வழிமறித்து டிரைவர் வெங்கடாசலத்தை தாக்கினர். பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.வெங்கடாசலம் புகார்படி, சிப்காட போலீசார் வழக்குபதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைகடந்த கல்வியாண்டில், 10, பிளஸ் 2 படித்த போலீசார், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை நேற்று வழங்கப்பட்டது. இதில் முதல், 10 இடங்கள் பிடித்த, 10 ம் வகுப்பு மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, 13 ஆயிரம்- ரூபாய், 2வது இடம் பிடித்தவருக்கு, 9,000, 3 வது இடம் பிடித்தவருக்கு, 5,000, மற்ற அனைவருக்கும் தலா, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது.பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு, 15 ஆயிரம் ரூபாய், 2- வது இடம் பிடித்தவருக்கு, 11 ஆயிரம், 3வது இடம் பிடித்தவருக்கு, 7,000- ரூபாய், மற்ற அனைவருக்கும் தலா, 5,000 ரூபாய் என மொத்தம், ஒரு லட்சத்து, 23 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை, தர்மபுரி மாவட்டஎஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் மாணவர்களுக்கு வழங்கினார்.பிளாஸ்டிக் ஒழிப்பு,மஞ்சப்பை விழிப்புணர்வுகிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு, மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சங்கர், தலைமை ஆசிரியர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வினோதினி, கலை நிகழ்ச்சி, பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.புதுகுரல் கலைக்குழு சார்பில், பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகங்கள், பொம்மலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. மாணவர்களும், பொதுமக்களும் கண்டுகளித்தனர். பங்கேற்ற அனைவருக்கும், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் மஞ்சப்பைகளை வழங்கினார். ஏற்பாடுகளை அறம் விதை அறக்கட்டளை செய்திருந்தது.சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மெக்கானிக்கிற்கு 20 ஆண்டு சிறைஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மெக்கானிக்கிற்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு, பெரியார் நகர், கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் சாந்தகுமார், 49; ஆலை இயந்திரங்கள் பழுது நீக்கும் மெக்கானிக். ஐந்தாம் வகுப்பு படித்த, 10 வயது சிறுமியை, தனது அறைக்கு அழைத்து சென்று, ஆபாச படங்களை காட்டி, 2014 முதல், 2018 வரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதையறிந்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், 2018ல் புகார் செய்தனர்.விசாரித்த போலீசார் போக்சோ பிரிவுகளில் சாந்தகுமாரை கைது செய்தனர். அவரது அறையில் டி.வி., டி.வி.டி, சினிமா படங்கள் அடங்கிய, 10 சி.டி.,க்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சாந்தகுமாருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !