மேலும் செய்திகள்
ஆசிட் தொட்டி வெடித்து இரு ஊழியர்கள் படுகாயம்
26-Oct-2025
போலி மது விற்றவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
26-Oct-2025
28ல் நகராட்சியில் கூட்டம்
26-Oct-2025
ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த மாணவி
26-Oct-2025
பிளஸ் 1 மாணவி மாயம்
26-Oct-2025
மகள் காதலனுடன் ஓட்டம்தந்தை விபரீத முடிவுசேலம், அம்மாபேட்டை, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அழகேசன், 52. இவர் மாநகராட்சியின் மன்னார்பாளையம் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மகள் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்த நிலையில், வாலிபரை காதலித்துள்ளார்.காதலுக்கு அழகேசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலர்கள் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இதனால் மனமுடைந்த அழகேசன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வங்கியில் பணிபுரிந்தஒடிசா அதிகாரி சாவுஒடிசா மாநிலம், சாபா நகர் அருகே சிந்துபுரியை சேர்ந்தவர் பிஜோய்குமார் பாரசாகர், 38. அஸ்தம்பட்டி இட்டேரி ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், அழகாபுரம் கனரா வங்கியில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வந்தார்.சர்க்கரை நோய் தாக்குதலுக்கு உள்ளான இவர், மது அருந்தும் பழக்கம் கொண்டவர். கடந்த, 20 மாலை, 3:00 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலிசேலம், கோரிமேடு கோம்பைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில், மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.சேலம், கோரிமேடு, கோம்பைப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன், 37. கொத்தனார் வேலை பார்க்கும் இவர், அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதன் சுவருக்கு தண்ணீர் தெளிக்க நேற்று காலை, 7:00 மணிக்கு மின் மோட்டாரை இயக்கி உள்ளார்.அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலிவீட்டின் படியில் இருந்து, தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.ஆத்துார், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 77. கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை, 7:00 மணியளவில் வீட்டின் படிகள் வழியாக நடந்து வந்தார். அப்போது, தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் உயிரிழந்தார்.ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தி.மு.க., மாநாட்டிற்கு சென்றவர் விபத்தில் பலிசேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டிற்கு சென்று வந்த இளைஞர், சங்ககிரி அருகே லாரி மோதி பலியானார்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், கணியூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சதீஷ்குமார், 33. ஒன்றிய செயலர் ஈஸ்வரசாமி தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாடு முடிந்து இரவு சேலத்தில் இருந்து திருப்பூருக்கு திரும்பும் போது, வைகுந்தம் சுங்கச்சாவடி ஆனந்தபவன் ஓட்டல் அருகே இரவு உணவு சாப்பிட்டு விட்டு, இயற்கை உபாதை கழித்து விட்டு தேசிய நெடுஞ்சாலையை கடந்து உள்ளார்.அப்போது கோவையில் இருந்து சேலம் சென்ற அரசு விரைவு பஸ்சை, கெங்கவல்லி ஆனையம்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம், 55, ஓட்டி வந்துள்ளார். இரவு, 11:10 மணிக்கு சதீஷ்குமார் மீது பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025