உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை

ஓமலுார்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஓமலுாரில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் நுார்ஜகான், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்; காலி பணியிடங்களை நிரப்புதல்; ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை