உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புறநகர் மின் பிரிவு அலுவலகங்கள் திறப்பு

புறநகர் மின் பிரிவு அலுவலகங்கள் திறப்பு

தாரமங்கலம்: தாரமங்கலம் பாப்பம்பாடி மின் பிரிவு அலுவலகத்தை பிரித்து, துட்டம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே புதிதாக புறநகர் பிரிவு அலுவலகம் உருவாக்கப்பட்டது. இந்த அலுவலகம் மூலம் ஆரூர்பட்டி, கணக்குப்பட்டி, பச்சப்பட்டி, துட்டம்பட்டி, தெசவிளக்கு, பவளத்தானுார், குருக்குப்பட்டியை சேர்ந்த நுகர்வோர் பயன்பெறுவர்.அதேபோல் பாப்பம்பாடி, அழகுசமுத்திரம் மின் பிரிவு அலுவலகத்தை பிரித்து, கே.ஆர்.தோப்பூர் பஸ் ஸ்டாப் அருகே புதிதாக புறநகர் பிரிவு அலுவலகம் உருவாக்கப்பட்டது. இந்த அலுவலகம் மூலம் கே.ஆர்.தோப்பூர், கிருஷ்ணம்புதுார், கோணகாபாடி, மாட்டையாம்பட்டி, எலமகவுண்டனுார், மாங்காடு, அத்திகாட்டானுாரை சேர்ந்த நுகர்வோர் பயன்பெறுவர்.முன்னதாக, இரு புறநகர் பிரிவு அலுவலகங்களை, கடந்த, 1ல் சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், மக்கள் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், மேட்டூர் ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணி, ஈரோடு தலைமை பொறியாளர் தாரணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ