உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாக்கடை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாக்கடை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வாழப்பாடி: வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், முறையான சாக்கடை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு காமராஜர் நகரில் முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை. சாக்கடை கால்வாய் இருந்தும், கழிவு நீர் வெளியில் செல்ல வழி இன்றி தேங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் அலட்சியமாக இருந்துள்ளனர்.இதனால் நேற்று காலை, 10:00 மணியளவில், அப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள், தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் கல், கட்டைகளை வைத்து அதன் மேல் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். வாழப்பாடி போலீசார் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை