உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வளர்ப்பு பிராணி அலங்கரிப்பு களைகட்டியது அழகு போட்டி

வளர்ப்பு பிராணி அலங்கரிப்பு களைகட்டியது அழகு போட்டி

கொளத்துார்: சேலம் மாவட்டம் கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி பாலவாடியில் சித்தேஸ்வரர் கோவில் அருகே உள்ள மைதானத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கு அழகு போட்டி நேற்று நடந்தது. இதில் பாலவாடி அதன் சுற்றுப்பகுதி விவசாயிகள், மக்கள், வீடுகளில் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்கு கண்ணாடி போட்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். சில விவசாயிகள், பசுக்கள், காளைகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அலங்கரித்து கொண்டுவந்தனர்.பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பு செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் வென்ற ஆடு, பசு, காளை, நாய் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பாலவாடி நண்பர் குழுவை சேர்ந்த வேலுசாமி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை