உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொங்கல் வைத்து மாடு ஓட்டி போலீஸ் கமிஷனர் உற்சாகம்

பொங்கல் வைத்து மாடு ஓட்டி போலீஸ் கமிஷனர் உற்சாகம்

சேலம்: சேலம் மாநகர போலீஸ் துறை சார்பில், லைன்மேடு ஆயுதப்-படை மைதானத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்-டது. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை வகித்தார். போலீசார், பாரம்பரிய உடையான வேட்டி சேலை, அணிந்திருந்-தனர். கமிஷனர், அவரது மனைவி, புதுப்பானையில் பொங்கல் வைத்து வணங்கினர். தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி மைதா-னத்தில் சுற்றி வந்தனர். பின் போலீஸ் துறையில் பணிபுரிவோரின் குழந்தைகள் நடனம், கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. உறியடி நிகழ்ச்சியில், கமிஷனர் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைத்தார். துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களும், உறியடித்து மகிழ்ந்-தனர். கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, கமிஷனர் பரிசு வழங்கினார்.தெற்கு துணை கமிஷனர் வேல்முருகன், தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா உள்ளிட்ட போலீசார், குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ., அலுவலகத்தில், ஒன்-றிய தலைவர் நிர்மலா தலைமையில் பொங்கல் விழா கொண்டா-டப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ