பாதுகாப்பை வலியுறுத்தி போலீசார் அணிவகுப்பு
ஆத்துார், ஆத்துாரில், சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையில், ஆத்துார் டவுன், ஊரக போலீசார் சார்பில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. அதில் பெண்களை கிண்டல் செய்தல், போக்குவரத்து நெரிசல், ரவுடிகள் மாமூல் கேட்பதை தடுத்தல் ஆகியவற்றை தடுக்கும்படி, அணிவகுப்பு நடந்தது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.