உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் ஸ்டேஷன் முன் பூஜை: வீடியோ வைரல்

போலீஸ் ஸ்டேஷன் முன் பூஜை: வீடியோ வைரல்

பெ.நா.பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அதன் எல்லைக்குட்பட்ட பகு-தியில் குற்றங்கள் நடக்காமல் இருக்க, போலீஸ் ஸ்டேஷனில் பூஜை செய்து, பூசணிக்காய், எலுமிச்சை பழத்தை வெட்டி, ஸ்டேஷனின், 4 மூலைகளில் வைத்து, நுழைவாயில் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, 'போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, கட்டுமான பணி மேற்கொள்வோர், பூஜை செய்து பணியை தொடங்கி இருப்பர். போலீசார் சார்பில் எந்த பூஜையும் செய்யவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை