மேலும் செய்திகள்
அரசு பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டி அட்டகாசம்
14-Jun-2025
தாரமங்கலம், தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், பிளஸ் 2 வரை, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.பள்ளி முன்புறம் உள்ள வகுப்பறை சுவரில், பெயர் பலகை உள்ள இடத்தில் சிலர், கட்சி தலைவர்கள் படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதேபோல் பள்ளி சுற்றுச்சுவர், பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதார மைய சுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பள்ளி வளாக பகுதிகளில், போஸ்டர் ஒட்டுவதை நிரந்தரமாக தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் சேலம், பூலாவரி பாலம் அருகே உள்ள பயணியர் நிழற்குடை உட்புறம் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது. அவற்றை அகற்றி, நிழற்குடையை பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14-Jun-2025