சர்வதேச வில்வித்தையில் தங்கம் மலைக்கிராம மாணவருக்கு பாராட்டு
ஏற்காடு: ஏற்காடு, புலியூர் மலைக்கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - சிவ-சக்தி தம்பதியர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களது மகன் சஞ்சீவ், 12, மகள் பவ்-யாஸ்ரீ. இதில் சஞ்சீவ், திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார்.அவர் கோவையில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளை-யாட்டு கழகத்தில் வில்வித்தை, சிலம்ப பயிற்சி பெற்று வரு-கிறார். இதன்மூலம் கடந்த, 8, 9, 10ல், இலங்கையில், ஸ்ரீலங்கா சிலம்ப பெடரேஷன் சார்பில் நடந்த சர்வதேச சிலம்பம், வில்-வித்தை போட்டியில் பங்கேற்றார். அதில் வில்வித்தையில் தங்கம், சிலம்ப போட்டியில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். தொடர்ந்து நாடு திரும்பிய அவர், நேற்று மாலை, ஏற்-காடு, ஒண்டிக்கடைக்கு வந்தபோது, புலியூர் மலை கிராம மக்கள், பட்டாசு வெடித்து, மேள, தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச்சென்று, பின் அவர் வீடு வரை சென்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.