உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடியரசு தின விழாவில் 355 பேருக்கு விருதுகள் வழங்கல்

குடியரசு தின விழாவில் 355 பேருக்கு விருதுகள் வழங்கல்

சேலம்: சேலத்தில் நடந்த குடியரசு தின கொண்டாட்டத்தில், 355 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.குடியரசு தினத்தையொட்டி சேலம் காந்தி மைதானத்தில் கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் முதல்வரின் காவலர் விருதை, 166 பேருக்கும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 77 அலுவலர், 112 பணியாளருக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள், எல்லைப்போாரட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு, கலெக்டர் கார்மேகம் கதராடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பல்வேறு துறைகள் சார்பில், 30 பயனாளிகளுக்கு, 19.41 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி கல்வித்துறை சார்பில் தேசபக்தி, நாட்டுப்புற கலைகள், தமிழ்மொழின் மேன்மையும், தமிழ் தலைவர்களின் பெருமையும் உள்ளிட்ட தலைப்புகளில், 1,667 மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., அருண் கபிலன், ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர் மேல் மங்கை, வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தேசிய கொடியேற்றி போலீஸ் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். அதில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள், 'மிக்ஜாம்' புயலில் சிறப்பாக பணியாற்றியவர்கள், பொது சேவை புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாநகாரட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. கமிஷனர் பாலசந்தர், துணை மேயர் சாரதா தேவி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.சேலம் கோட்ட அரசு போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் பொன்முடி தேசிய கொடியேற்றினார். மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், சப்-கலெக்டர் பொன்மணி, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ரமேஷ் தேசியக்கொடியேற்றினார்.அதேபோல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், உழவர் சந்தைகள், தனியார் நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை