உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆகாசவாணி மேம்பாட்டு பணி துவக்கி வைத்த பிரதமர் மோடி

ஆகாசவாணி மேம்பாட்டு பணி துவக்கி வைத்த பிரதமர் மோடி

ஏற்காடு : சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஆகாசவாணி பண்பலை ஒலிபரப்பு நிலையம், 103.7 அலைவரிசை, 2013 முதல் இயங்கி வருகிறது. அதன் தரத்தை உயர்த்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை முடிவு செய்தது. தொடர்ந்து, 11 கோடி ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தப்படும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த காட்சி, ஏற்காடு பண்பலை ஒலிபரப்பு நிலைய வளாகத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து திருச்சி அகில இந்திய வானொலி பொறியியல் பிரிவு உதவி இயக்குனர் செந்தில் நாயகி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஏற்காடு மலைவாழ் பழங்குடியின மக்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.இப்பணி முடிந்த பின் பண்பலை ஒலிபரப்பு, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட, 15 மாவட்டங்களுக்கும் ஏற்காடு, நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கும் தடையின்றி மிக துல்லியமாக கிடைக்கும் சூழல் உருவாகும் என, நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்