உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிரதமர் பிறந்தநாள்: 30 பேர் ரத்ததானம்

பிரதமர் பிறந்தநாள்: 30 பேர் ரத்ததானம்

பனமரத்துப்பட்டி:பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி, பா.ஜ.,வின், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமை வகித்தார்.சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், ரத்ததானம் வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார். சேலம், தனியார் ரத்த வங்கியினர் தானம் பெற்றனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மரக்கன்று, சான்றிதழ் வழங்கினார்.மாநில செயலர் வினோஜ் செல்வம், துணைத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர், ரத்த தான முகாம் ஏற்பாடு செய்த நிர்வாகிகளை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை